அமெரிக்க அரசாங்க செல வினங்களுக்கும் வருவாய் களுக்கும் இடையிலான இடை வெளிவேகமாக விரிவடைந்து வரு வதால், அமெரிக்காவின் தேசியக் கடன் $38 ட்ரில்லியனைத்தாண்டி யுள்ளது. அமெரிக்க கருவூலத் துறையின் செவ்வாய்க்கிழமை(21) அறிக்கையில் இந்த அதிர்ச்சியூட் டும் எண்ணிக்கையை ஆக குறிப் பிடப்பட்டுள்ளது
இந்த எண்ணிக்கை அமெ ரிக்காவில் உள்ள ஒவ்வொரு நப ருக்கும் சுமார் $111,000 கடனாகும், மேலும் இது சீனா, இந்தியா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பொருளா தாரங்க ளின் மொத்த மதிப்புக்கு சமம் என்று வாஷிங்டன், டி.சி.யை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான பீட்டர் ஜி பீட்டர்சன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாத நடுப்பகுதி யில் அமெரிக் காவில் கடன் $37 டிரில்லியனைத் தாண்டிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த மைல் கல் வருகிறது. 2024 நவம்பரில் கடன் $36 டிரில்லியனாகவும், அந்த ஜூலை மாதம் $35 டிரில்லியனாகவும் இருந்தது.
அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் தங்கள் “அடிப்படை நிதி கடமைகளை” நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஏ பீட்டர்சன் கூறினார். மே மாதத்தில், மூடிஸ் மதிப்பீடுகள் அமெரிக்க அரசாங்கத்தின் கடன் மதிப்பீட்டை Aaa இலிருந்து Aa1 ஆகக் குறைத்தன. நிதிச் சந்தைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 200 சதவீதத்திற்கு மேல் அமெரிக்க கடன் அளவை பொறுத்துக்கொள்ளாது என்று 2023 ஆம் ஆண்டு பகுப்பாய்வில், பென் வார்டன் பட்ஜெட் மாதிரியின் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம் பின் மிகவும் அழகான வரவு செலவுத்திட்டத் தில் சேர்க்கப்பட்டுள்ள கடுமையான வரி குறைப் புகளின் காரணமாக, 2047 ஆம் ஆண்டுக்குள் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 200 சதவீதத்தை எட்டும் என்று பாரபட்சமற்ற காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.



