ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை பிரஞ்சு அரசாங்கம் அங்கீகரிக்க கோரி எழுச்சி பேரணி

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை

நீதிக்காகவும் உரிமைக்காவும் எனும் தொனிப்பொருளில் எழுக தமிழா எழுச்சி பேரணி ஒன்று பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது. 

ஈழத்தமிழர்களின்  தேசிய அடையாளங்களை  அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரான்ஸ்  அரசாங்கத்தை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர்களால்  எழுச்சி பேரணி ஒன்று பிரான்ஸ்  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

குறித்த பேரணியில், “ஈழத்தில் நடந்த மாபெரும் தமிழின அழிப்பு என்பதை பிரஞ்சு அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் வலியுறுத்துகின்றோம், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை பிரஞ்சு அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும், தமிழ் மக்களை திட்டமிட்டு இனப்படு கொலை செய்த சிறிலங்கா  பேரினவாத அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு  பாரப்படுத்தி சுயாதீன விசாரணை நடாத்த வேண்டும். தமிழீழ மக்களால் ஏகமனதாக ஏற்றுக்காள்ளப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின்  அடிப்படையில் சுகந்திரத் தமிழீழம்  மட்டும்தான் ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு என்பதை  பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்துகின்றோம்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News