இலங்கை போதைப் பழக்க நீக்க மையத்தில் அமைதியின்மை :ஒருவர் உயிரிழப்பு 600 பேர் தப்பியோட்டம்

600  பேர் தப்பியோட்டம்: இலங்கையின் பொலன்னறுவை – கந்தகாடு பகுதியிலுள்ள போதை புனர்வாழ்வு மத்திய நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார்  600  பேர் தப்பியோடியுள்ளனர்.

புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு  மோதலொன்று இடம்பெற்றதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைதியின்மையின்போது, 36 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்குள் தொடர்ந்து அமைதியின்மை வலுப் பெற்றதாக கூறப்படும் நிலையில் அங்கிருந்து சுமார் 600 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamil News