383 Views
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் ‘நாட்டை தெருவுக்கு கொண்டுவந்த அனைத்து திருடர்களை விரட்டியடிப்போம்’ எனும் தொனிப் பொருளில் அரசுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலாச்சாரபீட மாணவர் ஒன்றியத்தின் அழைப்பையடுத்து இன்று காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக வளாக்தில் மாணவர்கள் ஒன்றினைந்தனர்.
இதனையடுத்து மின்சாரத்தை தடையின்றி வழங்கு, அதிகரிக்கும் வாழ்கைச் செலவை குறை, மக்களை இருள் வாழ்கைக்கு தள்ளதே, மக்களை பட்டிச்சாவை சாவுக்கு தள்ளாதே, பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வு வழங்கு, கோட்டா வீட்டுக்கு செல் போன்ற பல்வேறு வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏற்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த பல்கலைகழக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.