ஐ.நா தீர்மானம் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை – ஸ்ரீபன்

264 Views

தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம், தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனவும், அனைத்துலக நியாயாதிக்கக் கொள்கைகள் உள்ளவாங்கப்படவில்லை எனவும் இந்த வாரம் பிரித்தானியாவின் பிறைற்றன் பகுதியில் இடம்பெற்ற பிரித்தானியாவின் தொழிற்கட்சிக்கான தமிழர்களின் கூட்டத்தில் பேசிய தென் ஆசியாவுக்கான நிழல் அமைச்சர் ஸ்ரீபன் கினொக் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை மனச்சாட்சியின் மீது படிந்த கறையாக தொடர்ந்தும் நீடிக்கின்றது. இலங்கை விவகாரத்தில் பிரித்தானியா காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ் மக்களுக்கு எதிராக அநீதியில் ஈடுபட்டவர்களை அனைத்துலக சமூகத்தினால் நீதியின் முன் நிறுத்த முடியும்.

அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஏன் உருவாக்கப்படவில்லை. இலங்கை அரசையும், அதன் படைகளையும் அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply