3.2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக உக்ரைனில் இருந்து வெளியேறிவிட்டதாக ஐ.நா தகவல்

3.2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்

3.2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக உக்ரைனில் இருந்து வெளியேறிவிட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஹங்கேரி (Hungary), சுலோவாக்கியா (Slovakia), ருமேனியா (Romania), மோல்டோவா (Moldova) ஆகிய அண்டை நாடுகளில் பெருமளவிலானவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

போலந்தில் அதிகமாக ஒவ்வொரு நாளும் 10,000க்கும் மேற்பட்டோர்  தஞ்சம்புகுந்து வருவதாக கூறப்படுகின்றது.

உக்ரைனில் இருந்து  சில அகதிகள் ஜெர்மனி, செக் குடியரசு (Czech Republic) என மேற்கு ஐரோப்பாவுக்குச் செல்கின்றனர்.