பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி ஐ.நா. அலுவலகம் முன் போராட்டம்

319 Views

ஐ.நா. அலுவலகம் முன் போராட்டம்

ஐ.நா. அலுவலகம் முன் போராட்டம்: பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும் நீதிமன்றங்களில் வழக்குத் தொடராமல் சிறைவாசம் அனுபவிப்போரை விடுவிக்கக் கோரியும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்னால் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் சிறைவாசம் அனுபவித்துவருபவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்களது பிள்ளைகள் சகிதம் இந்த அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமின்றி சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க கோரிக்கையும் இதன் போது விடப்பட்டது.

Tamil News

Leave a Reply