கடந்த வாரம் உக்ரைனின் டினிப்புரோ பகுதி மீது மேற் கொள்ளப்பட்ட புதிய ஏவுகணைத் தாக்குதல் போன்ற தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களில் உக்ரைனின் தலைநகர் கிவ் மற்றும் உக்ரைனின் படைத்துறை திட்டமிடல் மற் றும் கட்டளை மையங்கள் மீதும் மேற்கொள்ளப்படும் என ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீன் கடந்த வியாழக்கிழமை(28) தெரிவித்துள்ளார்.
எங்களிடம் பல வகை ஏவுகணைகள் உள்ளன. மேலும் பல ஏவுகணைகளை விரைவாக உற்பத்தி செய்து வருகின்றோம். எனவே உக்ரைனின் கட்டளை மையங்கள் அனைத்தும் அழிக்கப் படும் என கசகஸ்தானுக்கு மேற் கொண்ட பயணத்தின் போது அங்கு இடம்பெற்ற மாநாட்டில் பூட்டீன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமது அணு வாயுதப் பாவனை தொடர்பான முன்னைய கொள்கைகள் மாற்றப் பட்டு விட்டதாகவும், அவற்றை மேற்குலக நாடுகள் ஒருமுறை நன்கு படித்துப் பார்க்கவேண்டும் எனவும் ரஸ்யாவின் பாதுகாப்புச் சபையின் தலைவர் சேர்ஜி சொய்கு கடந்த வியாழக்கிழமை(28) தெரிவித்துள்ளார்.