உக்ரைன் போர்- உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்: உலக வர்த்தக அமைப்பு எச்சரிக்கை

உக்ரைன் போரால் தொடங்கிய உணவு நெருக்கடி, பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என உலக வர்த்தக மையத்தின் தலைமை இயக்குனர் எங்கோசி ஒகொன்ஜோ-இவேலா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கோதுமை மற்றும் உரங்கள் பற்றாக்குறையால் ஆப்பிரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலட்சக்கணக்கிலான டன்கள் அளவுக்கு தானியங்கள் சேமிப்புக் கிடங்குகளில்  வைக்கப்பட்டுள்ளன. அவை போர் காரணமாக  உக்ரைன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தானியங்களின் விலை உயர்வது “உண்மையில் வேதனைக்குரியது” என அவர் தெரிவித்துள்ளார்.

Tamil News