உக்ரைன், ரஷ்ய போர்: நவம்பரில் மட்டும் 45,680 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

கிழக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் மேற்கு கர்ஸ்க் பிராந்தியத்தில் சுமார் 2,350 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றியுள்ளது மற்றும் மீட்டுள்ளது.

இதில்  பெரும் உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. ” கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 45,680 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த  2022- பெப்ரவரி- போர் தொடங்கியதிலிருந்து எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு ரஷ்யா சந்தித்த அதிகபட்ச உயிரிழப்பு இதுதான்” என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.