ரஷ்யாவின் கூர்க்ஸ்(Kursk) பிராந்தியத்தில் 100 குடியேற்றப் பகுதிகளை கைப்பற்றியுள்ளதோடு 600 ரஷ்ய இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதியன்று முதல் முறையாக உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்து, கூர்க்ஸ் பிராந்தியத்துக்குள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தின. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டதோடு, ரஷ்ய இராணுவமும் குவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இத் தாக்குதல் குறித்து விளக்கமளித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, “எல்லையில் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலை நிறுத்துவதற்காகத்தான் இந்த முயற்சி. அதை தவிர வேறு எந்த காரணமும் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.




