உக்ரைன் விவகாரம்  –  ஜேர்மன் அரசு கவிழ்கின்றது 

மூன்று கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தி வந்த ஜேர்மன் அரசுக்கான ஆதரவை சுதந்திர ஜனநாயகக் கட்சி விலக்கிக் கொண்டதால் தற் போதைய ஒலாப் ஸ்கொல் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளதுடன், சிறு பான்மை அரசாகவும் மாற்றம் பெற்றுள்ளது. இந்த நிலையில் புதிய தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசுமைக்கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் ஆதரவில் சமூக ஜன நாயகக் கட்சியின் தலைவர் ஒலாப் ஸ்கொல் ஜேர் மனில் ஆட்சியமைத்திருந்தார்.

ஆனால் கடந்த புதன்கிழமை (6) சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவரும் நிதி அமைச்சருமான கிறிஸ்ரியன் லின்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அந்த கட்சி அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது.

இது ஜேர்மன் மக்களுக்கும், ஐரோப்பாவுக்கும் மிகவும் நெருக் கடியான கால கட்டம். நாம் அதனை முறியடிக்க வேண்டும் என இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜேர்மனின் வெளிவிவகார அமைச்சர் அனலீனா பார்பொக் தெரிவித் துள்ளார்.

உக்ரைன் போருக்கு நிதியை வழங்கு வதற்காக தனது சொந்த நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தற்போதைய அரசு நிதி ஒதுக்குவதில் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்

வைத்த நிதி அமைச்சர் அரசின் பல நிதி ஒதுக்கீடுகளில் தலையிட்டதால் அரசுக்குள் மோதல்கள் ஏற்பட்டதுடன், நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆட்சியை தக்கவைப்பதற்காக தற்போதைய அரசு எதிர்க் கட்சியின் ஆதரவை நாடி நிற்கின்றது.

அது கைகூடாததால் எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதில் தற்போதைய அரசு தனது பலத்தை உறுதிப்படுத்தாது விட்டால், 733 பேர் கொண்ட நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவை அரச தலைவர் வழங்குவார் அதன் பின்னர் 60 நாட்களில் தேர்தல் நடத்தப்படும்.