புது வருடத்தில் அமெரிக்காவில் இரு பயங்கரவாதத் தாக்குதல்கள்

புதிய வருடப் பிறப்பன்று அமெரிக்காவில் இடம் பெற் றதாக கருதப்படும் இருவேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் குறித்து விசார ணைகளை அமெரிக்காவின் புல னாய்வு அமைப்பான எப்.பி.ஐ மேற் கொண்டு வருகின்றது.

புதுவருடப் பிறப்பன்று அமெரிக்காவின் சென் ஒலியன்ஸ் நகரத்தில் உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த வீதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட பிக்அப் வாகனத்தை அமெரிக்காவின் முன்னாள் படை வீரர் ஒருவர் செலுத்தியதால் 15 பேர் கொல்லப்பட்டும், மேலும் பலர் காயமடைந்துமிருந்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடி, துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் மீட்கப் பட்டதாக காவல்துறையினர் தெரி வித்துள்ளனர். சமுட் டின் ஜபார் என்ற 42 வயதான தாக்குதலாளி அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியதுடன், ஆப்கான் போரிலும் பங்குபற்றியிருந்தார்.

அதேசமயம், வாகனத் தாக்குதல் இடம் பெற்று சில மணி நேரத்தில் அமெரிக்காவின் லொஸ் வேகஸ் பகுதியில் அமைந்துள்ள ட்ரம்ப் ஆடம்பரவிடுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைபர் றக் (Cybertruck) எனப்படும் மிகவும் பாதுகாப்பானது என வடிவமைக்கப்பட்ட வாகனம் திடீரெனெ வெடித்து சிதறியுள்ளது. எலோன் மஸ்க்கின் ரெஸ்லா நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம் திடீரெனெ வெடித்து சிதறியத்திற்கும் சென் ஒலியன்ஸ் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலுக்கும் தொடர்புகள் உள்ளது என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த இரு தாக்குதல்களுக்கும் இடையில் தொடர்புகள் உண்டா என்பது குறித்து விசாரணைகளை நடத்துமாறு தான் உத்தர விட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை(1) இரவு பேசும் போது தெரிவித்துள் ளார்.

இதனிடையே இந்த தாக்குதல் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் எனவும், வாடகைக்கு அமர்த்தப்பட்ட காரில் வெடி குண்டுகளை ஏற்றி சென்ற சமயம் அது வெடித்துள்ளது எனவும் ரெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் வாகனத் தின் சாரதி கொல்லப்பட்டதுடன், 7 பேர் காயமடைந்திருந்தனர்.