நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது இருவர் கைது

266 Views

1628053149 Maharagama OIC critically injured amidst IUSF protest L நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது இருவர் கைது

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ராஜகிரியவில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் முன்னிலை சோசலிஸ்ச கட்சியின் நிர்வாக செயலாளர் சமீரா கொஸ்வத்த மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர் கோஷிலா ஹன்சமாலி ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அதனை தடுத்து நிறுத்த முயற்சித்த மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இரு விரல்கள் முறிந்து பலத்த காயமடைந்து  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,   இவர்கள் இருவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை மற்றும்  காவல்துறை அதிகாரியை காயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று  காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் நீதி மன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply