தையிட்டி விகாரை பகுதியை புகைப்படம் எடுத்த வடமராட்சி இளைஞர்கள் இருவர் கைது

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை பலாலி  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெசாக் தினத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில் நடைபெற்று வரும் நிலையில், விகாரைக்கு சற்று தொலைவில், காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள், விகாரைக்கு செல்வதாக கூறி, விகாரை பகுதிக்குச் சென்று, அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்துள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதனை அடுத்து இருவரையும் கைது செய்து பலாலி  காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.