இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற அகதி உள்பட 2 பேர் கைது

169 Views

இராமேசுவரத்தில் இருந்து  இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இராமேசுவரம் தொடருந்து நிலையம் அருகே சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 பேரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரித்துள்ளனது. அதில் ஒருவர் இலங்கையை சேர்ந்த கீர்த்தனன்(வயது 30) என்பதும், இவர் கடந்த 2020-ம் ஆண்டு இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டு போலி ஆதார் அட்டை மூலம் வங்கதேசம் சென்றிருச்ததும் பின் வங்கதேசம் சென்ற இவரை அந்நாட்டுக் காவல் துறையினர் போலி ஆதார் அட்டை, கடவுசீட்டு மூலம் வந்ததாக கைது செய்து சிறையில் அடைத்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து 7 மாத சிறைவாசத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட கீர்த்தனன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சென்னை வந்துள்ளார்.

சென்னை வந்த இவர்  முகவர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாயை முற்பணமாக  கொடுத்து இலங்கை செல்ல முயற்சித்த நிலையில், அவரும் அவருக்கு உதவியதாக  முகவர் ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil News

Leave a Reply