துருக்கி – சிரியா நில நடுக்கம்- 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000த் தாண்டியுள்ளது.

இதனால் துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் உள்ள 10 மாகாணங்களில் 3 மாத காலத்துக்கு அவசர நிலையை துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.

கட்டிட இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப் பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 20,000-மாக அதிகரிக்கலாம். 2 கோடியே 30 இலட்சம் பேர்பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில்,உலக நாடுகள் துருக்கிக்கு விரைந்து உதவ வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.