துருக்கி நிலநடுக்கம்: 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 500 பேருக்கு மேல் பலியானதாக தகவல்

துருக்கி நிலநடுக்கம்

சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளனர்.

7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை எனக் கூறப்படுகின்றது.

துருக்கி, சிரியா இரு நாடுகளில் மொத்தமாக நிலநடுக்கத்தால் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.