பிறப்பு குடியுரிமை தொடர்பான ட்ரம்பின் உத்தரவு இரத்து!

அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே அந்நாட்டின் குடியுரிமை கிடைக்கும் ‘பிறப்புரிமை குடியுரிமை’ சட்டத்தைக் கட்டுப்படுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அவசர நிர்வாக உத்தரவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரத்து செய்துள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பின் 14-ஆவது திருத்தத்தின்படி, அங்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற 150 ஆண்டுகால நீண்டகால மரபை உறுதி செய்து நீதிமன்றம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.