ஈரானுடன் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்ய ட்ரம்ப் விரும்பம்!

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் ஒரு ‘பெரிய ஒப்பந்தம்’ செய்ய விரும்புவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், செவ்வாயன்று (ஏப்ரல் 14) அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் கூறினார்.

சிபிஎஸ் நியூஸ் தகவலின்படி, ஜார்ஜியாவின் ஏதென்ஸில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய ஜே.டி. வான்ஸ், கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தைகளில் ‘குறிப்பிடத்தக்க முன்னேற்றம்’ ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

“ட்ரம்ப் ஈரானுடன் ஒரு சிறிய ஒப்பந்தத்தை அல்ல, ஒரு பெரிய ஒப்பந்தத்தை செய்ய விரும்புவதாக”, அவர் கூறினார். அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையே ஒருவித நம்பிக்கையின்மை நிலவுவதையும் வான்ஸ் ஒப்புக்கொண்டார். “இந்தப் பிரச்னையை ஒரே இரவில் தீர்த்துவிட முடியாது,” என்றும் அவர் கூறினார்.