அமெரிக்கா: ட்ரம்ப்பை இலக்கு வைத்து 2ம் முறையாக துப்பாக்கி பிரயோகம்…

Donald Trump

முன்னாள் அமெரிக்க அதிபரும் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கச்சூடு நடத்தும் முயற்சி இடம்பெற்றுள்ளது. டொனால்ட் ட்ரம்ப்  பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் குடியரசுக்கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள சர்வதேச கோல்ப் கிளப்பில் டிரம்ப் விளையாடிக்கொண்டிருந்த போது அவருடைய பார்வைக்கு உட்பட்ட தொலைவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்பின்னர் ட்ரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.

அண்மையில் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் முன்னாள் ட்ரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் காயமடைந்தார்.

இந்த நிலையில், டிரம்ப் இருந்த பகுதிக்கு அருகில் துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளமை அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது இடம்பெற்ற சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக  டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.