அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் ‘மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை’ குறித்து விவாதித்தார்.
”அதிபர் ட்ரம்ப் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்கு ஆசியாவின் சூழல் குறித்து அவருடன் ஒரு நல்ல உரையாடல் நடைபெற்றது. பதற்றங்களைத் தணிப்பதையும், கூடிய விரைவில் அமைதியை மீட்டெடுப்பதையும் இந்தியா ஆதரிக்கிறது. ஹோர்மூஸ் நீரிணை திறந்திருப்பதும், பாதுகாப்பாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் இருப்பது முக்கியம்” என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் எக்ஸ் பக்கத்தில் , “அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்பு பிரதமர் மோடியுடன் பேசினார். ஹோர்மூஸ் நீரிணையை திறந்து வைத்திருப்பது உட்பட, மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து இருவரும் விவாதித்தனர்,” என்று பதிவிட்டுள்ளார்.



