தென் கொரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை 25% ஆக உயர்த்தப் போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை தென் கொரியா ‘முறையாக அமல்படுத்தவில்லை’ என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கார்கள், மரப் பொருட்கள், மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் மீதான வரி 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனை “பரஸ்பர வரி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் இந்த அறிவிப்பு தொடர்பாக தங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என தென் கொரியா கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தென் கொரியா கோரியுள்ளது.



