திருகோணமலை: பண்குளத்தில் மீள் குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு

மீள் குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு

திருகோணமலை பண்குளம் பகுதியில் கடந்த 1983 ம் ஆண்டுக்கு முன்னர் 320 குடும்பங்களுக்கு மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் வசித்து வந்தனர்.

1983 மற்றும் 1990 ஆகிய காலப்பகுதிகளில்   இங்கு வாழ்ந்து வந்த மக்கள் சிங்கள காடையர்களால் அடித்து துரத்தப்பட்டனர்.

இந்நிலையில் அப் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் இடம் பெயர்ந்து இந்தியா மற்றும் திருகோணமலை நகரப்பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.மீண்டும் இவர்கள் தமது வாழ்விடங்களுக்கு திரும்பிச் சென்று வாழ்வதற்கான உதவிகளை அரச அதிகாரிகளை அணுகி கேட்டபோது அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் எவ்விதமான அடிப்படை தேவைகளையும் செய்து கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

இருந்த போதிலும் தமது தற்துணிவின்பாள் தாங்கள் வசித்து வந்த மற்றும் தமது மூதாதையோர் வாழ்ந்த பூமியை யாருக்கும் விட்டுக் கொடுக்காது அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமது சொந்த நிலத்தில் 15 குடும்பங்கள் முதல்கட்டமாக குடியேறியுள்ளனர். இவர்களுக்கு வாழ்வாதார திட்டங்கள் மற்றும் அடிப்படைத்தேவைகள் முக்கிய தேவையாக காணப்படுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamil News