கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி  

80 Views

உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி  

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக் கேணியில் நேற்று மிதப்புப் பாலம் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று இடம்பெற்ற இந்த  விபத்து காரணமாக உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் கூழாமுறிப்பு அரசினர் தமிழ் கலவன்  பாடசாலை மாணவர்கள் இன்று  அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி நிகழ்வில் பாடசாலை ஆசியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply