‘போர், வறுமை’ என வெளியேறும் மக்கள் மத்திய தரைக்கடலில் தொடர்ந்து உயிரிழக்கும் போக்கு

154 Views

தொடர்ந்து உயிரிழக்கும் போக்கு

மத்திய தரைக்கடலில் தொடர்ந்து உயிரிழக்கும் போக்கு

“மத்திய தரைக்கடலில் ஏற்படும் இந்த தொடர் உயிரிழப்பாலும் நிகழ்ந்து வரும் இந்த அசம்பாவிதத்தை தடுப்பதற்கான போதிய நடவடிக்கையின்மையாலும் நான் அதிர்ந்து போயுள்ளேன்,” எனக் கூறியிருக்கிறார் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் லிபிய தலைமை அதிகாரியான பெடிரிக்கோ சோடா.

போர் மற்றும் வறுமை காரணமாக ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் நோக்கத்துடன் வெளியேறும் மக்களுக்கான முக்கிய புள்ளியாக ‘லிபியா’ இருந்து வருகிறது. இங்கிருந்து வெளியேறும் மக்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளை சென்றடைய முயல்கின்றனர்.

இந்த வழியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அர்ப்பணிப்புமிக்க தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மூலம் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Leave a Reply