அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை

அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதைத் தடைசெய்யும் உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அதனை அமல்படுத்தி அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர் சேர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க இராணுவம் நேற்று வெளியிட்ட பதிவில், “மூன்றாம் பாலினத்தவர் இனி இராணுவத்தில் சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் சேவையில் உள்ள உறுப்பினர்களுக்கு பாலின மாற்றம் தொடர்புடைய நடைமுறைகளைச் செய்வதோ, எளிதாக்குவதோ நிறுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

ஆண், பெண் என்ற இரண்டு பாலினத்தை மட்டுமே அரசு அங்கீகரிக்கும் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் கலந்து கொள்வதை தடை செய்யும் உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.