ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பின் இரண்டாம் நாள் இன்று நடைபெறவுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் நடத்தப்பட கலந்துரையாடலில் நல்லிணக்கப் பொறிமுறைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
எனினும் தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், மற்றும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.