யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்திற்கும் – விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிய பின்னர் இந்திய இராணுவத்தின் பரவலான விமானக்குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கு அஞ்சி கொக்குவில், ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பல மக்கள் பாதுகாப்புக்கருதி கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சமடைந்தார்கள்.
1987 ஒக்டோபர் 24ம் திகதி குறித்த கல்லுாரியின் மீது இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட பீரங்கித்தாக்குதலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.