இன்றுடன் 2000 நாட்கள் கடந்து , தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

128 Views

வடக்கு, கிழக்கில் இலங்கை அரச படைகள் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கிய ஆயுதக் குழுக்களால் கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தி வந்த போராட்டம்  இன்றுடன் 2000 நாட்களை கடக்கவுள்ளது.

இதேவேளை தமது உறவுகளை தேடியலைந்து 121 உறவுகள் உயிரிழந்துள்ளனர்.

இதில்   வவுனியா மாவட்டத்தில் 16 பேர் இவ்வாறு   உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் , ஐக்கிய நாடுகள் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது போராட்டங்களை  தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிட்டதக்கது.

Leave a Reply