அரசு நினைக்கும் விடயங்களை வடக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நிறைவேற்றுகின்றார்கள்: சுரேஷ் பிறேமச்சந்திரன் குற்றச்சாட்டு

அரசு நினைக்கும் விடயங்களை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசு நினைக்கும் விடயங்களை வடக்கு மாகாணத்தில் நிறைவேற்றுகின்றார்கள் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்த்தாவது:-

13ஆவது திருத்தச் சட்டத்தை நாம் தமிழரின் தீர்வாக ஒருபோதும் ஏற்க வில்லை. அதனை ஏற்கப்போவது மில்லை. ஆனால், தற்போதுள்ள பூகோள அரசியல் நிலையில் தமிழ் மக்களைப் பாதுகாக்க அதாவது வடக்கில் இராணுவ மயமாக்கல், சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து தமிழ் மக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே ஆறு தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிர தமருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத் துள்ளோம்.

அந்தக் கடிதத்தின் தொடர்ச்சியாக நாம் டில்லி சென்று இந்தியப் பிரதமரைச் சந்தித்து அடுத்தகட்டமாக முன்னெடுக் கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்ன ணியினர் மக்கள் மத்தியில் போலிப் பிர சாரத்தை மேற்கொள்வது போல் நாங்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை; ஏற்றுக்கொள் ளப்போவதுமில்லை.

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசு எதைச் செய்ய நினைக்கின்றார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகின்றார்கள். அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்க ளாகச் செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்’ எனவும் சுரேஷ் பிறேமச்சந்திரன் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

Tamil News