நாளை நடைபெறவுள்ள இலங்கை ஆசிரியர் சங்க கவனயீர்ப்பு போராட்டத்திற்கு த.தே.ம.முன்னணி ஆதரவு

463 Views

ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரதும் கைதை கண்டித்தும் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தும் போராட் டத்திற்கு த.தே.ம.முன்னணி பூரண ஆதரவைத் தெரிவித் துள்ளது.

கல்வியில் இராணுவ மயமாக்கலை முன்மொழிகின்ற கொத்தலாவலை பாதுகாப்பு சட்ட வரைபுக்கு தமது தொழிற் சங்க ரீதியான ஜனநாயக எதிர்ப்பை வெளிப் படுத்திய போது, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் சட்ட விரோதமாக கைது செய்யப் பட்டிருந்தனர். நீதி மன்றத்தால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்த பின்பும், தனிமைப் படுத்தலை காரணம் காட்டி முறையற்ற விதமாக முல்லைத்தீவு விமானப் படைத் தளத்தில் தடுத்தும் வைக்கப் பட்டுள்ளனர்.

அடக்கு முறையை நோக்கமாகக் கொண்ட அரசின் இந்த மோசமான செயற் பாடுகளை கண்டித்து, நாளை வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தால் நடத்தப் படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவு வழங்குகிறது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 நாளை நடைபெறவுள்ள இலங்கை ஆசிரியர் சங்க கவனயீர்ப்பு போராட்டத்திற்கு த.தே.ம.முன்னணி ஆதரவு

 

 

Leave a Reply