தமிழ் தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைப்பு

Police2 800x425 1 தமிழ் தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைப்பு

தமிழ் தேசிய முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரான ப.தவபாலனை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். 

கொரோனாவின் தாக்கம் காரணமாக கடந்த காலங்களில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்களினால் பல உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

7cfc8de2 3ddb 462d bb58 e61818681061 தமிழ் தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைப்பு

அந்த வகையில் மஸ்கலிய பகுதியில் கொரோனா இடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வவுனியாவில் பொருட்களை சேகரித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடாக ப. தவபாலன் முன்னின்று வழங்கியிருந்தார்.

இவ்வாறான உதவியினை மேற் கொண்டமைக்காக குறித்த அழைப்பாணை வழங்கப் பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பணியின் நிமித்தம் அவர் வெளியே சென்றிருந்த சமயம், அவரது வீட்டிற்கு சென்ற காவல் துறையினர் சிங்கள மொழியில் எழுதப்பட்ட அழைப்பாணையினை வழங்கி 12.07.2021 காலை 9.30 மணிக்கு வருமாறும் கூறிச் சென்றுள்ளனர்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 தமிழ் தேசிய முன்னணியின் முக்கியஸ்தர் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைப்பு

Leave a Reply