திபெத்தின் ஆன்மீக தலைவர் இலங்கைக்கு பயணம் மேற் கொள்ள சீனா எதிர்ப்பு

திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை எதிர்ப்பதாக  சீனா தெரிவித்துள்ளது.

திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா மததலைவர் என்ற போர்வையில் அரசியல்தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒருவர் அவர் சீனாவிற்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் அவர் திபெத்தை சீனாவிலிருந்து பிரிக்க முயல்கின்றார் என இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர்  மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக தலாய்லாமா இலங்கைக்கோ அல்லது வேறு எந்த நாட்டிற்கோ விஜயம் மேற்கொள்வதை எதிர்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.