இலங்கையில் பொருளாதார நெருக்கடி- ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தமிழகத்தில் தஞ்சம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தமிழகத்தில் தஞ்சம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

படகு மூலம் சென்ற இவர்கள் தனுஷ்கோடி அருகேயுள்ள கோதண்டராமர் கடற்கரையை இன்று புதன்கிழமை அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

இவ்வாறு தமிழகம் சென்றவர்களை மீட்ட மெரைன் காவல்துறையினர் இராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து இலங்கையில் வசிக்க முடியாது வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து இதுவரை இவ்வாறு தமிழகத்திற்கு அகதிகளாக தஞ்சமடைந்தவர்களது எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News