யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அண்மைக்காலத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்திருக்கின்றது. இதன் பின்னணி என்ன, இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன, அவற்றை எவ்வாறு தடுக்க முடியும் என்பன தொடா்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத்துறைத் தலைவரும், பண்பாட்டு மையத்தின் இயக்குனருமான கலாநிதி க.சிதம்பரநாதன் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வில் இந்த வாரம் கலந்துகொண்டு தன்னுடைய கருத்துக்களை வழங்கியிருந்தார்.