பொழுதைக்கழிக்க கடற்கரைக்குச் சென்றவர்களை தமிழகம் செல்ல முயன்றதாகக் கூறி கைது

பொழுதைக்கழிக்க கடற்கரைக்குச் சென்றவர்களை தமிழகம் செல்ல முயன்றதாகக் கூறி கைது

பொழுதைக்கழிப்பதற்காக மன்னார் கடலுக்குச் சென்ற 10 சிறுவர்கள் உட்பட 13 பேர்  மன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தொழிலாளர் நாளான நேற்று விடுமுறையை முன்னிட்டு மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த சில குடும்பங்கள் கடற்கரைப்பகுதிக்குச் சென்ற நிலையில், சிறுவர் குழு ஒன்றும் கடற்கரைக்குச் சென்றுள்ளது. இதையடுத்து குறித்த சிறுவர்கள் தமிழகத்திற்குச் செல்ல முயற்சிப்பதாக கூறி குறித்த சிறுவர்கள் உட்பட 13 பேரை கடற்படையினர் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து சிறுவர்களை நீதிமன்றம் பெற்றோருடன் செல்ல அனுமதித்துள்ளதோடு 3 பேரை மட்டும் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

கடந்த மாதம் மன்னார் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற குடும்பம் ஒன்றை தமிழகம் செல்ல முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil News