இந்தியா செல்ல முயன்றவர்கள் கைது
சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த இரண்டு பெண்கள், ஆண் குழந்தை ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்கரையோரத்தில் நேற்றிரவு கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியை சேர்ந்த 28 மற்றும் 33 வயதான இரண்டு பெண்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.