இலங்கையில் பதற்றத்தை தூண்டும் விதத்தில் கருத்துக்களை வெளியிடும் சிலர்: அருட்தந்தை ஜூட்கிருஸாந்த எச்சரிக்கை

இலங்கையில் சிலர் பதற்றத்தை தூண்டும் விதத்தில்வெளியிடும் கருத்துக்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள்இருக்கலாம் என கொழும்பு பேராயர் இல்ல ஊடக பேச்சாளர் அருட்தந்தை ஜூட்கிருஸாந்த  தெரிவித்துள்ளார்.

மதங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் மதங்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்துவதற்காக இடம்பெறுகின்ற  முயற்சிகளின் பின்னணியாக இருக்கலாம் என ஜூட்கிருஸாந்த  தெரிவித்துள்ளார்.

இது வெவ்வேறுவழிகளில் வெளிப்படலாம்.  உதாரணத்திற்கு ஒருவர் தனது மதத்தை தானே கடுமையாக விமர்சிப்பதன் மூலம் அதனை பின்பற்றுபவர்கள் மத்தியில் சீற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்த முயலலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சிலர் வேறு மதங்களை விமர்சிக்கலாம்  அந்தமதங்கள் குறித்து பாதகமான கருத்துக்களை வெளியிடலாம், இதன் மூலம் அந்தமதத்தை பின்பற்றுபவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ள அருட்தந்தை,இதன் காரணமாக பொறுமை மற்றும் அதிருப்தி என்பன கைநழுவி வன்முறை எண்ணங்கள் முதன்மைபெறலாம்.  இவ்வாறான சூழ்நிலை தோன்றாத வகையில் நாங்கள் எங்கள் எண்ணங்களை பாதுகாக்கவேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.

 இதனால் பல்வேறு சமூகங்கள் மத்தியில் அச்சம் நம்பிக்கையின்மை சந்தேகம் என்பன ஏற்படலாம். நாங்கள் எங்கள் சிந்தனைகள் குறித்து எச்சரிக்கையாகயிருக்க பழகவேண்டும்,இந்த முயற்சிகளிற்கு பின்னால் மோசமான அரசியல்  நோக்கங்கள் இருக்கலாம்,இந்த நாட்டில் இது நிகழ்ந்த மிகமோசமான வரலாறு உள்ளது இதன் காரணமாக எவரும் இந்த நிகழ்ச்சிநிரலிற்கு பலியாககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.