ரஸ்யாவுக்குள் தாக்குதல் நடத்த தேவையான ஆயுதங்களை மேற்குலக நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்குவதன் மூலமும் ரஸ்யாவுக்குள் உக்ரைன் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை ஊக்கப்படுத்துவதன் மூலமும் மேற்குலக நாடுகள் மூன்றாவது உலகப்போரை தூண்டுவதாக இத்தாலியின் துணை பிரதமர் மற்றியோ சல்வினி தெரிவித்துள்ளார்.
அண்மையில் உக்ரைன் மேற்கொண்டுள்ள ரஸ்யாவின் கேர்க்ஸ் பகுதி மீதான தாக்குதல்களில் அது மேற்குலகத்தின் ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. அதனை மேற்குலக ஊடகங்கள் பலவும் உறுதிப் படுத்தி வருகின்றன.
ரஸ்யாவுக்குள் தமது ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா உட்பட பல மேற்குலக நாடுகள் அனுமதிகளையும் வழங்கியுள்ளன. ஆயுதங்களை அனுப்பி ரஸ்ய மக்களை அவர்களின் மண்ணில் வைத்து கொல்வது என்பது மிகப்பெரும் பேரழிவை எற்படுத்தும். இது மிகப்பெரும் போர் ஒன்றை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.
நேட்டோவின் தலைவர் ஸ்ரேலன்பெர்க் மிகவும் ஆபத்தான மனிதர் ரஸ்யாவுக்குள் தாக்கு தல் நடத்துவதற்கான அனுமதியை உக்ரைனுக்கு வழங்கியவர்களில் அவரும் ஒருவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



