இலங்கை: பாராளுமன்ற சூழலில் முற்றுகை போராட்டம்-மேலும் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுப்பு

351 Views

பாராளுமன்ற சூழலில் முற்றுகை

பாராளுமன்ற சூழலில் முற்றுகை

பாராளுமன்றத்துக்கு வெளியில் தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பத்தரமுல்ல பொல்துவ சந்தியிலிருந்து பாராளுமன்றத்துக்குச் செல்லும் பாதை மூடப்படவுள்ளது.

பாராளுமன்றம் ஏற்கனவே விஷேட பாதுகாப்புப் படையினரை நிறுத்தியுள்ளது.

ஆளும் கட்சி பெரும்பான்மைப் பலத்தை இழக்க அதிக வாய்ப்புகள் உள்ளதால் இன்றைய பாராளுமன்றம் தீர்க்கமான ஒன்றாக இருப்பதாகத் தெரிய வருகிறது.

May be an image of 5 people, people standing and outdoors

அதே நேரம் அரசாங்கத்தின் செய்றபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நோட்டன் – அட்டன் வீதியில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னடுக்கப்பட்டுள்ளது.

Gallery

அத்துடன் வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் பல மாவட்டங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply