மடகாஸ்கரில் அரசு கட்டுப்பாட்டை தாங்கள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மடகாஸ்கர் ராணுவ பிரிவான CAPSAT, அதிபர் ஆன்ட்ரி ராஜோலினாவை ஆட்சியிலிருந்து அகற்றி, அரசு கட்டுப்பாட்டை கைப்பற்றியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய அதிபர் மார்க் ரவலோமனானாவை ஆட்சியிலிருந்து அகற்றி ராஜோலினா அதிகாரத்தைக் கைப்பற்றியபோது அவரை இராணுவம் ஆதரித்தது.
நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற முக்கியமான ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, ராணுவம் அறிவித்துள்ளது.
அதிபருக்கு எதிராக தேசிய நாடாளுமன்றம் பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றிய நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.