இந்திய மத்திய அரசுடனேயே மீனவா் பிரச்சினை குறித்து பேச வேண்டும் – சுமந்திரன்

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளா்களுடனான சந்திப்பு ஒன்றிலேயே இதனைத் அவா் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இழுவை மடி தொடர்பில் நான் கொண்டு வந்த தனிநபர் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டது. அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்தால் இந்த நிலை நீடிப்பதற்கான ஒரே ஒரு காரணமாக இருந்தது” எனத் தெரிவித்தாா்.

”தற்போது அது நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிகின்றேன்” எனக் குறிப்பிட்ட சுமந்திரன், “இழுவை மடி விவகாரத்துக்கு முடிவு கொண்டு வரப்படவேண்டும் என 2016 ஆம் ஆண்டில் ஒரு கூட்ட அறிக்கையை இலங்கை – இந்திய அரசாங்கங்கள் விடுத்திருந்ததைத் தொடர்ந்து தான் அந்த சட்டமும் இயற்றப்பட்டது.

மாநில அரசுக்கு இந்த இழுவை மடி படகுகளில் ஈடுபடுபவர்களுடன் சம்பந்தம் இருக்கலாம் ஆகையினாலே அவர்களுடனும் பேசவேண்டும் என்கின்ற ஒரு கருத்து இருக்கிறது” என்றும் சுமந்தின் குறிப்பிட்டாா்.