வடக்கில் அமைக்கப்பட்டுவரும் விகாரைகள் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் -சிறிதரன்

வடக்கில் அமைக்கப்பட்டுவரும் விகாரைகள் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரியுள்ளார்.

பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர்,

கிளிநொச்சி தண்ணீர் தாங்கிக்கு அருகில், விகாரை அமைப்பதற்கான நில அளவைப் பணிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார். அத்துடன், ஆனையிறவு முகாமுக்கு பின்புறமாக, பாரிய விகாரை அமைக்கப்பட்டு வருவதாகவும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் பிரதேசங்களில் அவர்கள் கண்ணுக்கு தெரியாமல் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

போரில் தமிழர்கள் அழிக்கப்பட்டதை விட தற்போது மோசமாக அழிக்கப்பட்டு வருகின்றனர். வடக்கு கிழக்கில் கிட்டத்தட்ட 200 இற்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.