சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழர்களின் காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சி

தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்தும் தமது தேவைகளை பூர்த்தி செய்யாத அரசாங்கம் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு காணிகளை வழங்குவதற்கு முனைப்பு காட்டுவதாக கிளிநொச்சி கால்நடைவளர்ப்போர் கூட்டுறவு சங்க சமாச தலைவர் வைரமுத்து கேதீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட கால்நடை வளர்ப்பு சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று  நடைபெற்ற போது,“உண்மையான தேவையுடைய தமிழ் மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்காமல், சீனா உள்ளிட்ட நாடுகளிற்கு காணிகளை வழங்குவதந்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல்வாதிகள் ஊடாக அறிகின்றோம்.

இங்குள்ள பிரதேச மக்களின் தேவையை பூர்த்தி செய்யாது, சீனாவிற்கும், வெளி மாவட்டத்தில் உள்ளவர்களின் சில தேவைகளிற்கும் விரைவாக காணி வழங்குவதில் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் கவலை அடைகின்றோம்” என்றார்.