மீனவர்கள் தங்களது படகுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கக் கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மண்ணெண்ணெய் கொள்முதலுக்கு நிவாரணம் வழங்கக் கோரி இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியான சிலாபத்தில் மீனவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று 12ஆவது நாளாக தொடர்கிறது.
பல மீனவர்கள் தங்கள் தொழிலை கைவிட்டு வேறு தொழிலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மீனவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.