இலங்கை அரசின் முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை

341 Views

ஐரோப்பிய ஒன்றியம் கவலை
ஐ.நா. கட்டமைப்பை நிராகரிக்கும் இலங்கை அரசின் தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெளியகத் தலையீடுகளை நிராகரிப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச் சர் ஜீ.எல்.பீரிஸ் 48ஆவது அமர்வில் நேற்று உரையாற்றும்போது குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஐ.நா. 46/1 தீர்மானத் துக்கு அமைய இலங்கை நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயத்தில் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப் பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.

காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் திறம்படச் செயற்படுவதை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஐரோப் பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை போன்றவற்றில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படு வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி நிதி அனிடா பிபான் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப்படு வதன் முக்கியத்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply