கிளிநொச்சி: இலண்டனில் இருந்து திரும்பிய பெண் சடலமாக மீட்பு

424 Views

இலண்டனில் இருந்து திரும்பிய பெண்

இலண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலண்டனில் மகனுடன் வசித்து வந்த இராசேந்திரம் இராசலட்சுமி (வயது-67)  கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்தாக அம்பாள்குளம் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்துள்ளார்.

தனியாக வசித்து வந்திருந்த நிலையில் நேற்றயை தினம் வங்கிக்கு சென்று திரும்பியதாகவும், பி.பகல் 3.00 மணி முதல் 6.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இலண்டனில் இருந்து திரும்பிய பெண் இவ்வாறு காணாமல் போயுள்ள விடயம் நேற்று மாலை 7.20 மணியளவிலேயே உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. குறித்த பெண் காணாமல் போயுள்ளமை தொடர்பில் வீட்டு உரியைமாளரால் நேற்று மாலை 6.00 மணியவில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து சம்பவ இத்திற்கு சென்றுள்ள கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த வீட்டின் உள்ளே இரத்தக் கறைகள் காணப்படுவதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் குறித்த பெண்ணின் சடலம், பொது செய்யப்பட்டு கந்தபுரம் பரப்பாலம் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் பூநகரி தம்பிராய் பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரது 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும், கணவர் விவசாயம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Tamil News

Leave a Reply