வியட்நாம் முகாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

163 Views

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது

கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் உயிரிழந்தவரின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என தெரிவித்து கடந்த மாதம் 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்தனர். இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம், தற்போது நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

வியட்நாமிலுள்ள மூன்று முகாம்களில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply