காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தாக்குதல் -இருவர் வைத்திய சாலையில்

133 Views

காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தாக்குதல்

காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தாக்குதல்: மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் வைத்து கடந்த 5ம் திகதி இரவு 8 மணியளவில் வவுணதீவு  காவல் துறையினரால் இரு இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அவசர தேவை கருதி தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் தனது ஊந்துருளிக்கு எரிபொருள் நிரப்பி விட்டு வீடு திரும்பிய இரு சகோதரர்கள் மீதே துப்பாக்கியால் சராமாரியாக காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.

காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தாக்குதல்

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டு முகத்தில் பல தையல்களுடன் அனுமதிக்கப் பட்டுள்ளாதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தினேஷ் 8656 எனும் இலக்கம் உடைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இந்த  தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுள்ள நிலையில், இந்த உத்தரவுகளை மீறினார்கள் என்று குற்றம் சுமத்தி காவல் துறையினரால்  இவ்வாறான தாக்குதல்  சம்பவங்கள் இடம் பெறுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகுகின்றமை குறிப்பிடத்தக்கது

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply